மருத்துவமனையில் உள்ள ஓராங் அஸ்லிகளுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் , டிபி இல்லை- சுகாதார அமைச்சு

14 பேர்   இறந்துபோன குவா மூசாங், கம்போங் கோ-வில் உள்ள ஓராங் அஸ்லிகள் லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் காச நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை இல்லை என சுகாதார அமைச்சு கூறியது.

ஆனாலும் அந்த 14 பேரின் இறப்புக்குக் காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை எனச் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட் கூறினார்.

“அவர்களைப் பாதித்த நோய் எது என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள்மீது மேற்கொள்ளப்பாட்ட சோதனைகள் அவர்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் டிபி இல்லை என்பதைக் காட்டுகின்றன.

”விரைவில் இதற்குப் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்”, என சுல்கிப்ளி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.