ஐஜிபி: ஜோ லோவைக் கொண்டுவர ‘ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன’

போலீஸ் பிடியில் சிக்காமல் ஆசிய நாடு ஒன்றில் மறைந்து வாழும் தொழிலதிபர் ஜோ லோவைக் கைது செய்யவும் நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவரவும் புக்கிட் அமான் முயற்சி மேற்கொண்டிருக்கிறதென இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

அந் நாட்டு அரசாங்கத்துடன் சேர்ந்து “சில ஏற்பாடுகளைச் செய்து வருவதாக”, போலீஸ் படைத் தலைவர் தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

“நம்புங்கள். அவ்விவகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம்”, என்றாரவர். ஆனால், ஜோ லோ எந்த நாட்டில் உள்ளார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.