கோலா கோ ஓராங் அஸ்லிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்பதற்கு வேதமூர்த்தி மறுப்பு

பிரதமர்துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி, கோலா கோ- இல் உள்ள ஒராங் அஸ்லி மக்களை வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் திட்டமிடுவதாக கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமார் நிக் அப்துல்லா கூறியிருப்பதை மறுத்தார்.

பதேக் இன மக்களை அவர்கள் இப்போது வசிக்கும் கோலா கோவை விட்டு வேறு இடத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கம் ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை(ஜாகோவா)க்கு கிஞ்சிற்றும் இல்லை என வேதமூர்த்தி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“அரசாங்கம் பதேக் சமூகத்தினரின் பாரம்பரிய வாழ்க்கை முறையை மதிக்கிறது.

“அவர்கள் இயற்கைச் சூழல் மிக்க இடங்களில் வாழ்வதையே விரும்புகிறார்கள். பூர்விக இடத்தைவிட்டு அவர்களை வேறோர் இடத்துக்குக் கொண்டுசெல்வது நியாயமல்ல”, என்றாரவர்.