மாட் சாபுவின் ஆங்கிலத்தைக் குறைகூறிய பாஸுக்கு செனட்டர் கண்டனம்

அமனா கட்சி செனட்டர் ராஜா கமருல் பாஹ்ரின் ஷா ராஜா அஹமட், அண்மையில் நடந்து முடிந்த பாஸ் மாநாட்டில் பேராளர் ஒருவர் அமனா தலைவர் மாட் சாபுவின் ஆங்கிலத்தைக் கிண்டல் செய்ததைக் கண்டித்தார்.

“அண்மையில் நடந்த பாஸ் முக்தாமார் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களைச் சிறுமைப்படுத்தியுள்ளது. இதற்குமுன்பும் இப்படி நடந்தது உண்டு.

“சிலாங்கூர் பாஸ் பேராளர் ஒருவர் அண்மையில் சிங்கப்பூரில் ஒரு கூட்டத்தில் முகம்மட் பேசிய ஆங்கிலப் பேச்சைக் கேலி செய்தார்”, என்றாரவர்.

தாங்கள்தான் குறையற்றவர்கள் தங்கள் கட்சியே குற்றமற்றது என்று நினைப்பதும் பேசுவதும் பாஸ் கட்சியினரின் இயல்பாகி விட்டது என்றவர் சாடினார்.