டாக்டர் மகாதிர் முகம்மட் எப்போது பிரதமர் பதவியிலிருந்து விலகுவார், அவருக்குப் பின் யார் போன்ற கேள்விகள் ஒவ்வொரு நாளும் எழுப்பப்பட்டு அது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், அவர் மூன்றாண்டுகளுக்குள் பொறுப்பை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிடம் ஒப்படைத்து விலகிக் கொள்ளப்போவதாக கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை நான் பதவி விலகுவேன், அன்வார் எனக்குப்பின் பதவி ஏற்பார் என்று வாக்குறுதி அளித்துள்ளேன்”, என பெங்கோக்கில் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் பிரதமர் சிஎன்பிசி-இடம் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 94 வயதை எட்டும் மகாதிரிடம் மலேசியா பட்டுள்ள கடன் குறையும்வரை பிரதமர் பதவியில் இருப்பாரா என்று வினவியதற்கு, “இல்லை, மூன்றாண்டுகளுக்குமேல் இருக்கப்போவதில்லை”, என்றார்.

























