மகாதிரின் பிறந்த நாள் விருப்பம்: எடுத்துக்கொண்ட பணியை முடிக்க வேண்டும்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு இன்று பிறந்த நாள். இன்று 94 வயதாகும் அவருடைய பிறந்த நாள் விருப்பம் எடுத்த பணியை முடிப்பதுதான்.

“என் பிறந்த நாள் விருப்பம் மிகச் சாதாரணமானது. மலேசியாவை மீட்புப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும், அதுதான் என் விருப்பம்.

“நாட்டுக்குப் பணியாற்றுவது கிடைத்தற்கரிய வாய்ப்பு, ஒரு கெளரவம்”, என்று சமூக ஊடகத்தில் மகாதிர் பதிவிட்டிருந்தார். பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

உலகில் 90-வயதைத் தாண்டியும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் மூவர் மட்டுமே. அவர்களில் மகாதிர்தான் மூத்தவர்.

மகாதிரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு வரும் வெள்ளிக்கிழமை 93 வயதாகும்.