இதுவரை அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் பாலியல் காணொளி பற்றியே பேசி வந்தவர்கள் இப்போது காணொளியை வைரலாக்கியது யார் என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். அது தொடர்பில் உயர்நிலை அரசியல்வாதி ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்ற பேச்சும் அடிபடுகிறது.
அது பற்றி இன்று காலை செய்தியாளர்கள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோரிடம் வினவியதற்கு அவர் உறுதியான பதிலைத் தெரிவிக்கவில்லை.
பாலியல் காணொளி மீதான விசாரணை தொடர்கிறது என்று மட்டும் கூறினார். விசாரணைக்கு பெரும்புள்ளிகள் அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுவது உண்மையா என்று வினவப்பட்டது.
“அப்படி எதுவும் நான் சொல்லவில்லையே”, என்றாரவர்.
“விசாரணை நடக்கிறது என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். விசாரணை நடக்கிறது.
“அது முடிந்ததும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் அறிக்கை கொடுக்கப்படும்”, என்றவர் குறிப்பிட்டார்.