ஏபி-யைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு மறுபடியும் அதைக் கொடுக்கக் கூடாது- குற்றவியல் ஆய்வாளர்

அங்கீகரிப்பட்ட பெர்மிட்டுகளை(ஏபி)ப் பெற்று அவற்றைத் தவறாகப் பயன்படுத்தியவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கக் கூடாது, கொடுக்கப்பட்ட பெர்மிட்டுகளையும் பறித்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும்.

இதை வலியுறுத்திய குற்றவியல் ஆய்வாளரான அக்பர் சத்தார், சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்தினால் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மிச்சப்படுத்தலாம் என்றார்.

“அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். திருப்பிக் கொடுக்கவும் கூடாது. ஏபி-கள் பெரும்பாலும் விற்கப்படுவதைப் பார்க்கிறோம். முறையாக தொழில் செய்யும் தொழில்முனைவர்களுக்குத்தான் அவற்றைக் கொடுக்க வேண்டும். சட்டத்தை மீறுவோருக்கு அல்ல”, என அக்பார் கூறினார்.

அக்பார் ஹெல்ப் பல்கலைக்கழகத்தில் குற்றம், குற்றவியல் கழகத்தின் இயக்குனராக உள்ளார்.