உலக தடகள விளையாட்டுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் மலேசியர் ஹப் வெய்

உலக தடகள விளையாட்டுகளில் பெரிய சாதனை புரியாவிட்டாலும் அப்போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் மலேசியர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஹப் வெய்.

32-வயதினரான அவர், செவ்வாய்க்கிழமை டோஹாவில் கலிபா அனைத்துலக அரங்கில் நடைபெற்ற பி பிரிவு தகுதிச் சுற்றில் 2.29 உயரம் தாண்டி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

ஆனால்,  இன்று   12  பேர்  கலந்துகொண்ட   இறுதிச் சுற்றில்   ஹப் வெயால்    எட்டாவது   இடத்தைத்தான்  பிடிக்க  முடிந்தது.  இறுதிச் சுற்றில் அவர்   தாண்டிய   உயரம்  2.27 மீட்டர் . இது தேசிய அளவில் நவராஜ் சிங் ரண்டவா-வின்  2.30 மீட்டர் சாதனையைவிட குறைவுதான்.