பட்டமளிப்பு விழா எதிர்ப்பைக் காட்ட சரியான இடமல்ல, பட்டத்தைப் பறிக்க வேண்டிய அவசியமில்லை – சைட் சிட்டிக்
பெயரிலி770241447347646: எதிர்ப்பைக் காட்ட பட்டமளிப்பு விழா சரியான இடமில்லைதான். இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சிட்டிக் கூறுவதை ஒப்புக்கொள்கிறோம்.
மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் (விசி) அப்துல் ரஹ்மான் செய்ததும் தப்புத்தானே? சொந்த நோக்கத்துக்காக ஒரு பல்கலைக்கழகத்தை அவர் பயன்படுத்திக் கொண்டது ஏன்? அவருடைய செயலைக் கண்டிக்காதது ஏன்?
மாணவர் வொங் யான் கெ மட்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவது ஏன்?
விசி (மலாய் தன்மான காங்கிரசில்) அப்படிப் பேசாதிருந்தால் மாணவரும் அப்படி நடந்து கொண்டிருக்க மட்டார்.
சுக் மதிக்: எதிர்ப்புத் தெரிவிக்க “சரியான” இடம் ஒன்று இருக்கிறதா?
யாரும் பார்க்காத, கேட்காத இடத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பதால் என்ன பயன்?
ஆய்வாளன்: பேச்சுரிமையை ஆதரிப்பதும் பிறகு இந்த இடத்தில்தான் அதைச் செய்ய வேண்டும் என்று கட்டுப்படுத்துவதும் ஏற்கத்தக்கதல்ல.
ஒரு “மதிப்புமிக்க” பல்கலைக்கழகத்துக்குத் தலைவராக இருக்கவும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவும் இந்த விசி தகுதியானவர் அல்ல.
நாட்டில் உயர்ப் பதவிகளில் உள்ள பலரைப் போலவே இவரும் தகுதி பார்த்து அமர்த்தப்பட்டவர் அல்ல.
ம்ம்ம்ம்ம்ம்ம்: சைட் சிட்டிக் அவர்களே, எதிர்ப்பைக் காட்ட அது இடமல்ல என்று கூறியிருக்கிறீர்கள் ஆனால், இதற்குக் காரணமான விசியின் இனவாதப் பேச்சு பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையே.
அதோடு, எதிர்ப்பு பயனளிக்க சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுப்பது முக்கியம். அதை அந்த மாணவர் மிகச் சரியாகவே செய்திருக்கிறார்.
கவலைப்படாதவன்: உண்மை. குடும்பங்கள், நண்பர்கள், சக மாணவர்கள், முக்கிய பெருமக்கள், அத்துடன் அந்த இனவாத விசி இப்படிப் பலரும் சூழ இருந்த ஓர் இடத்தில்தான் அந்த மாணவர் எதிர்ப்பைக் காட்டினார். அது சரியான இடம் மட்டுமல்ல, கனகச்சிதமான இடமும்கூட.
வொங் நட்ட நடு நிசியில் ஆளற்ற அரங்கத்தில் எதிர்ப்பைக் காட்டும் போராட்டத்தை நடத்தியிருந்தால் யாருக்குத் தெரியப் போகிறது?
பொய் சொல்லாதவன்: சைட் சிட்டிக், எல்லா மலேசியர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும், கொடுக்காவிட்டால், நீங்கள் அமைச்சராக இருக்க தகுதியில்லை.
வொங் குற்றம் இழைத்திருப்பதாக நான் கருதவில்லை. அவர்மீது போலீஸ் நடவடிக்கை தேவையற்றது.
ஜெரார்ட் லூர்துசாமி: அமைச்சரே, நீங்கள் அப்துல் ரஹ்மானிடம் பதவி விலகி முழு நேர அரசியல்வாதி ஆகுமாறு ஆலோசனை கூறியிருக்கலாம். பட்டமளிப்பு விழாவில் எதிர்ப்பைக் காட்டுவது தப்பல்ல.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இப்படி நிறைய நடந்துள்ளது. விசியின் நிர்வாகக் குறைபாடும் மலாய் தன்மான காங்கிரசில் அவர் வெளிப்படுத்திய இனவெறியும்தான் இதற்குக் காரணம்.
இன்று, பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத்தில் உள்ள விசியின் அடிவருடி ஒன்று, வொங் பட்டமளிப்பு விழாவையும் வேந்தரையும் அவமதித்து விட்டார் அதனால் அவரது சான்றிதழையும் மற்ற ஆவணங்களையும் கொடுக்காமல் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது.
பல்கலைக்கழகத்தின் எந்த விதிமுறையின்படி சான்றிதழைக் கொடுக்காமல் பிடித்து வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? வொங், விசிக்கு எதிராகவும் பல்கலைக்கழக இயக்குனர் வாரியத்துக்கு எதிராகவும் வழக்கு தொடுத்து இழப்பீடு கோர வேண்டும்.