பாசிர் கூடாங் எம்பி ஹசான் அப்துல் கரிம், பாதுகாப்புச் சட்டம் (சிறப்பு நடவடிக்கைகள்) அல்லது சோஸ்மாவின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும், அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்டிடிஇ) தொடர்புள்ளவர்களோ ஐசிஐஎஸ் தொடர்புள்ளவர்களோ உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐஜிபி-யைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“காரணம், அது ஜிஇ14-இல் மக்களால் நிராகரிக்கப்பட்ட பிஎன் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கொடூரச் சட்டமாகும்”, என்று ஹசான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஒருவர்மீதான விசாரணையை 24 மணி நேரத்துக்குள் முடித்துக்கொள்ள இயலவில்லை என்றால் கூடுதல் காலத்துக்கு வைத்து விசாரிக்க ஒரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற வேண்டும் என்கிறது சாதாரண கிறிமினல் சட்டம் . ஆனால், சோஸ்மா சட்டத்தின்கீழ் ஒருவரை 28 நாள்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க முடியும்.
“இது கூட்டரசு அரசமைப்பின் பகுதி 5-க்கு முரணாக உள்ளது.
“எனவே, சோஸ்மாவின்கீழ்த் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது வேறு குற்றவியல் சட்டத்தின்கீழ்க் குற்றஞ்சாட்டபப்ட வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.