‘மகாதிரைப் பதவி இறங்கக் கட்டாயப்படுத்தினால் பிரச்னை உண்டாகலாம்’

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் கட்டாயப்படுத்திப் பதவி விலகச் செய்தால் அது பிரச்னைகளை உண்டு பண்ணலாம் என்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா.

அரசியல் நிலைத்தன்மைக்காக மகாதிரால் எவ்வளவு காலத்துக்கு இயலுமோ அவ்வளவு காலத்துக்குப் பிரதமராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் காத்திருக்கலாம், பாதகமில்லை என்றார்.

“அன்வாரால் (நாட்டை நிர்வகிக்க) முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், மகாதிர் ஏற்கனவே அங்கு உள்ளார். செய்வதை நன்றாக செய்கிறார். தொடர்ந்து அவரையே இருக்க வைத்து அவருக்குத் தேவையான ஆதரவைக் கொடுத்தால் என்ன?

“அதற்குப் பதிலாக மகாதிர் தாமே விலகாமல் அவரைக் கட்டாயப்படுத்திப் பதவி விலக வைத்தால் பிரச்னை உருவாகும் ஹரப்பானுக்குள், அது நாடு மொத்தத்தையும் பாதிக்கும்”, என்று அனுவார் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.