ஜோ லோ இப்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் இருக்கிறார்

மலேசிய சட்டத்தின் பிடியில் சிக்காது பதுங்கி வாழும் தொழிலதிபர் லோ டெக் ஜோ, வெளிநாடு ஒன்றில் அரசியல் அடைக்கலம் பெற்று இப்போது ஐக்கிய அரபு அமீரக(யுஏஇ)த்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

லோ இப்போது யுஏஇ-யில் வசிப்பதை உறுதிப்படுத்திய அவரின் பேச்சாளர் அவர் மத்திய கிழக்குக்கும் ஐரோப்பாவுக்குமிடையில் போகவர இருப்பதாகக் கூறினார் என த மலேசியன் இன்சைட் அறிவித்துள்ளது.

ஜோ லோ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் லோவுக்கு “அரபு அரச குடும்பங்களுடன் அணுக்கமான தொடர்பு உண்டு” என்பதால் அவர் குவைத், சவூதி அராபியா முதலிய மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பகுதி நேரத்தைக் கழித்துக் கொண்டிருப்பதாக அப்பேச்சாளர் மேலும் கூறினார்.