பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை வெளியிடுவீர்_ போலீசுக்கு பிகேஆர் கோரிக்கை

போலீஸ் பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றின் சித்தாந்தங்களையும் விவரிக்கும் பட்டியல் ஒன்றை வெளியிடுவது பொதுமக்களுக்கு பயனளிக்கும். அது, பொதுமக்கள் அப்படிப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைத் தவிர்க்க உதவும்.

இதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கும் பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஃபாஹ்மி பாட்சில் தன் கட்சி சோஸ்மா உள்பட விசாரணையின்றித் தடுத்துவைக்க வகை செய்யும் சட்டங்களை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை அடுத்து இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.