ஜோ லோ யுஏஇ- இல் உள்ளார் என்பது அப்பட்டமான பொய்- ஐஜிபி

மலேசிய அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் ஜோ லோ ஐக்கிய அரபு எமிரேட்சில் (யுஏஇ) வசிப்பதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் என்று நிராகரித்துள்ளார் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர்.

பல நாடுகளால் தேடப்படும் ஒரு நபர் யுஏஇ-க்குள் எளிதாக சென்று வருவதாகக் கூறப்படுவது நம்பக்கூடியதாக இல்லை என்றாரவர்.

“யுஏபி-இல் , விமான நிலையக் கட்டுப்பாடுகள் உள்பட பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம். அந்நாட்டுக்கு அரச மலேசிய போலீசுடன் நல்ல ஒத்துழைப்பு உண்டு.

“இந்தக் கதையைக் கட்டி விட்டது யார் என்பது எனக்குத் தெரியாது. அவரைச் சந்திக்க ஆவலாக உள்ளது. ஜோல் லோ எங்கு இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக்கொள்ள எனக்கும் ஆசைதான். சிலர் அவரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்…….கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

“குற்றவாளி எங்கிருந்தாலும் தேடிப் பிடித்துவரும் முயற்சியை விடேன்”, என்றாரவர்.