வாகன நிறுத்துமிடங்களில் தச் அண்ட் கோ-வுக்கு விதிக்கப்படும் 10 %கூடுதல் கட்டணம் முடிவுக்கு வருகிறது

வாகன நிறுத்துமிடங்களில் தச் அண்ட் கோ அட்டை மூலம் பணம் செலுத்தும்போது 10விழுக்காடு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது. இதற்குக் கட்டம் கட்டமாக முடிவு காணப்படும் என்று உள்நாட்டு வாணிக , கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சொங் சியெங் ஜென் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

என்றாலும், அதற்குச் சிறிது காலம் பிடிக்கலாம். தச் அண்ட் கோ நிறுவனமும் வாகன நிறுத்துமிட உரிமையாளர்களும் கூடுதல் கட்டணம் தொடர்பில் ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஒப்பந்தங்கள் காலாவதி ஆகும்வரை காத்திருக்க வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கூடுதல் கட்டணம் இருக்காது என்றாரவர்.