நாடாளுமன்றக் கூட்டங்களுக்குமுன் நெகாரா கூ, ருக்குன்நெகாரா- பிஎன் எம்பி

ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்குமுன் நெகாரா பாட வேண்டும், ருக்குன்நெகராவை வாசிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

அப்பரிந்துரையை முன்வைத்த ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் சலிம் ஷரிப் (பிஎன்) எம்பிகளிடையே நாட்டுப்பற்று உணர்வு மேலோங்க அவ்வாறு செய்வது அவசியம் என்றார்.