ஈராக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல் 5 பேர் பலியானதால் பதற்றம் அதிகரிப்பு

பாக்தாத்: மேற்காசிய நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்தில், நேற்று முன்தினம் கொல்லப்பட்ட ஈரான் நாட்டு ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்திற்கு முன் நடந்த தாக்குதலில், ஐந்து பேர் பலியாகினர்.

மேற்காசிய நாடான ஈராக்குக்கு ஆதரவாக செயல்படும், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, சிரியாவில் இருந்து விமானம் மூலம், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் சென்றார்.அவரை வரவேற்க, ஈரான் ஆதரவு பெற்ற, ஈராக்கை சேர்ந்த ஹஷீத் அல்ஷாபி கிளர்ச்சியாளர் படையின் துணை தளபதி அபு மஹ்தி அல் மஹந்தி, விமான நிலையம் வந்தார். குண்டு வீச்சுஇருவரும், ஒரு காரில் ஏறி, புறப்பட தயாராகினர். அப்போது, அமெரிக்க ராணுவம், ஆளில்லா விமானம் மூலம், குண்டுகளை வீசியதில், அவர்கள் அமர்திருந்த காரும் மற்ற சில கார்களும் வெடித்து சிதறின.அத்துடன் தாக்குதலில், இருவரும் பலியாகினர். இருதரப்பை சேர்ந்த, 10 போராளிகளும் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, போர் மூளும் அபாயம் உருவாகி உள்ளது.இந்நிலையில், உயிரிழந்த ஈரான் ராணுவ தளபதியின் உடல், ஈராக்கில் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இந்த ஊர்வலம் துவங்குவதற்கு சில மணி நேரம் முன், வடக்கு பாக்தாத்தில், ஈரான் ஆதரவு பெற்ற, ஈராக்கை சேர்ந்த ஹஷீத் அல்ஷாபி கிளர்ச்சிபடையினர் சென்ற கார் மீது, வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஐந்து பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை அமெரிக்க படையினர் நடத்தியதாக, ஈராக், ‘டிவி’ செய்தி வெளியிட்டது.இந்த இரண்டாவது தாக்குதல் சம்பவம், பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

எதிர்ப்பு கோஷம்

தளபதி குவாசிம் சுலைமானி மற்றும் அவருடன் உயிரிழந்த போராளி களின் உடல்கள், ஈராக்கில் நேற்று ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டன.இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈராக்கியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், கறுப்பு நிற உடை அணிந்து, ஈராக் தேசிய கொடி மற்றும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படையினரின் கொடிகளை ஏந்தியபடி, ‘அமெரிக்காவுக்கு மரணத்தை கொடுப்போம்’ என, கோஷங்களை எழுப்பினர்.இந்த ஊர்வலத்தில், ஈராக் பிரதமர் அடெல் அப்தெல் மஹ்தி கலந்து கொண்டார். சுலைமானியின் உடல், நேற்று மாலை ஈரானுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது. அங்கு, நாளை மறுநாள், அடக்கம் செய்யப்படுகிறது.இந்நிலையில், குத்ஸ் படைப்பிரிவில், துணை தளபதியாக பதவி வகித்து வரும் இஸ்மாயில் குவானி, புதிய தளபதியாக நியமிக்கப்படுவதாக, ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் குத்ஸ் படைப்பிரிவின் தளபதியை படுகொலை செய்ததன் மூலம், ஈரான் மீதும், ஈரான் மக்கள் மீதும், நேரடியான போரை, அமெரிக்கா துவங்கி விட்டது. இதை பாத்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. நிச்சயமாக, ஈரான் பதிலடி கொடுக்கும். பழிக்கு பழி வாங்க, ஈரான் தயாராகிவிட்டது. அது மிக கொடூரமானதாக இருக்கும்.

அது எங்கு; எப்போது;எப்படி நிகழ்த்தப்பட உள்ளது என்பதை, எல்லாரும் பார்க்கத்தான் போகிறீர்கள்.மஜித் தக்த் ரவாஞ்சிஐ.நா.,வுக்கான ஈரான் துாதர்அமெரிக்கர்களுக்கு எதிராக, குவாசிம் சுலைமானி நடத்த திட்டமிட்டு இருந்த பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கவே, இந்த திடீர் தாக்குதல் நடத்தப்ப்பட்டது. மேற்கொண்டு ரத்தம் சிந்தப்படுவதை தடுக்கும் தற்காப்பு நோக்கில் தான், அவரை கொன்றோம்.ராபர்ட் ஓ ப்ரையன்தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அமெரிக்காபோரை துவக்க அல்ல; நிறுத்தவே தாக்குதல்: டிரம்ப் விளக்கம்குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று கூறியதாவது:ஈராக்கில், அமெரிக்கர்களுக்கு எதிராக, சமீபத்தில் நடந்த அனைத்து வன்முறை சம்பவங்களும், சுலைமானியின் மேற்பார்வையின் கீழ் நடந்தவை. இந்தியாவின் புதுடில்லியில் இருந்து, பிரிட்டனின் லண்டன் வரை நடந்த, அனைத்து பயங்கர வாத தாக்குதல்களிலும், சுலைமானியின் பங்கு நிச்சயம் உள்ளது. அவர் படுகொலை செய்யப்பட்டதன் மூலம், பயங்கரவாதத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளை சீர்குலைக்கும் வேலைகளை, 20 ஆண்டுகளாக அவர் செய்து வந்தார். நாங்கள் நேற்று முன் தினம் நடத்திய தாக்குதலை, பல ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், பல உயிர்களையாவது காத்திருக்க முடியும்.சுலைமானியின் மரணம், நிச்சய மாக போருக்கு வழி வகுக்காது. நாங்கள் ஒரு போரை நிறுத்தும் நோக்கில் தான், இந்த தாக்குதலை நிகழ்த்தினோம். போரை துவங்குவது, எங்கள் நோக்கம் அல்ல.பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, அண்டை நாடுகளை நிலை குலைய செய்யும் நடவடிக்கைகளை, ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஈரான் மக்கள், பயங்கரவாதத்தை விரும்பவில்லை. அவர்கள் அமைதியையும், நல்லுறைவையுமே விரும்புகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.