சீன நாட்டை ஒட்டுமொத்தமாக அச்சுறுத்துகின்ற வகையில், ‘கொரனோ வைரஸ்’ தாக்குதலின் எதிரொலியாக, கோவை விமான நிலையத்தில், வெளிநாடு சென்று திரும்பும் விமான பயணியர்களிடம், பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
சீன நாட்டில், ‘கொரனோவைரஸ்’ என்கின்ற, நச்சுக் கிருமியானது மிகவும் வேகமாக பரவி வருகின்றது. அதன் காரணமாக, அங்கு இருப்பவர்கள் பல்வேறு விதமான தொற்று நோய்கள் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதற்கும், உயிருக்கு மிகவும் ஆபத்து ஏற்படுத்துகின்றது. அந்த வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்கு, அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும், உலக சுகாதார மையமானது எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது.
இந்தியர்கள் அனைவரும் சீனாவிற்கு செல்லும் போது, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், சீனாவில் மாமிசம் எதுவும் சாப்பிடவேண்டாம் என்றும், மத்திய அரசங்கமானது மிகுந்த எச்சரிகை விடுத்து இருக்கின்றது. மேலும், சீனாவிற்கு பயணம் மேற்கொள்கின்றவர்கள் அனைவரும், சீனாவில், உடல் நலம் சரியில்லாமல் இருக்கின்றவகர்கள், ஜலதோஷம், காய்ச்சலுடன் இருப்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கி செல்ல வேண்டாம் என்றும், அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
சீனா நாட்டிற்கு சென்று திரும்புகின்றவர்கள், அல்லது சீனாவிலிருந்து திரும்ப வருகின்ற பயணியர்கள் டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களின் விமான நிலையங்களில், மருத்துவ சோதனைகள் நடத்தபட வேண்டும் என்றும், மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கின்றது.
கோவை விமான நிலையத்தில் பயணியர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், அது பற்றி கோவை சுகாதார நல பணிகள் துறையின் துணை இயக்குனர் ரமேஷ்குமார் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில்,கோவை விமான நிலையத்தின் சிறப்பு மருத்துவ குழுவினர்கள் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடம், கொரனோ வைரஸ் பற்றிய பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. கோவைக்கு, சீனாவிலிருந்து வருகின்ற விமான பயணிகளிடமும் தீவிரமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.