உயிர்களை பறிக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, சீனா எச்சரிக்கை

வைரஸ் இறப்பு எண்ணிக்கை 42ஐ எட்டியுள்ளதால் சீனா ‘மோசமான சூழ்நிலையை’ எதிர்கொள்கிறது என்று அதன் அதிபர் ஜி ஜின்பிங் ஜி கூறுகிறார்.

கொரோனா வைரஸ் வெடித்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்ததால், சீனா ஒரு “மோசமான சூழ்நிலையை” எதிர்கொண்டுள்ளதாக அதிபர் ஜி ஜின் பிங் கூறினார். இது நேற்று தொடங்கிய சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களை கலையிழக்கவும் செய்துவிட்டது.

உலகளவில் 1,400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலோர் சீனாவில், ஹாங்காங் மற்றும் கிலுள்ளதால், அவ்விரு நாடுகளும் அவசரநிலையை அறிவித்தன. சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்களும் முடங்கிபோயின. மேலும், சீனா தன் முக்கிய இடங்களுக்கும் பகுதிகளுக்கும் தொடர்புகளை துண்டித்தது.

மலேசியா தனது முதல் நான்கு பாதிப்புகளை நேற்று உறுதிப்படுத்தியது. ஆஸ்திரேலியாவும் நான்கு பாதிப்புகளை உறுதிப்படுத்தியது, பிரான்ஸ் வெள்ளிக்கிழமை ஐரோப்பாவின் முதல் பாதிப்பை அறிவித்தது. உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் இந்த தொற்றுநோயைத் தடுக்க பெரிதும் முயலுகின்றனர்.

மையப்பகுதியான வுஹான் நகரத்திலிருந்து தனது குடிமக்களையும் தூதர்களையும் திரும்ப அழைத்து வர அமெரிக்கா இன்று ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான விமானங்கள் மற்றும் அதிவேக ரயில் பயணங்கள் நிறுத்தப்படும் என்று நகரத் தலைவர் கேரி லாம் கூறினார். தற்போது ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டு விடுமுறையில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 17 வரை மூடப்படும்.

“அதி விரைவான” பரவுதலை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஷி நேற்று ஒரு அவசர கூட்டத்தை நடத்தியதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் சுமார் 1,372 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வுஹானில் உள்ள ஒரு கடல் உணவு சந்தையில் சட்டவிரோதமாக வனவிலங்குகளை விற்பனை செய்து வந்ததன் பின்னனியில் இது தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, தைவான், நேபாளம் மற்றும் அமெரிக்காவிலும் இந்த வைரஸ் பரவியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

“நாங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். ஆனால் இப்போது நாங்கள் மிகவும் கடுமையான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்” என்று ஜெனரல் ஹு யிங் காய் செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஒரு அலாரத்தை உருவாக்கியுள்ளது, ஏனெனில் இது எவ்வளவு ஆபத்தானது, மக்களிடையே எவ்வளவு எளிதில் பரவுகிறது என்ற கேள்விகள் இன்னும் அறியப்படாமலே இருக்கிறது. இது ஆபத்தான நிமோனியா காய்ச்சலையும் ஏற்படுத்துத்க்கூடியது.

யாரும் வெளியே போக கூடாது` – என்றா கடும் கட்டுப்பாடில் சீன நகரங்கள் உள்ளன.

இன்று முதல், அதன் நகரத்திலிருந்து அத்தியாவசியமற்ற வாகனங்களை தடை செய்வதாக வுஹான் கூறியது. வியாழக்கிழமை முதல் கொண்டு, 11 மில்லியன் கொண்ட நகரத்தை பூட்டப்பட்ட நிலையில் முடக்கியது. கிட்டத்தட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டு, நகரத்திற்கு வெளியே செல்லும் பிரதான சாலைகளையும் சோதனைச் சாவடிகள் அமைத்து தடுக்கப்படுகின்றன.

59 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஹூபே மாகாணம் முழுவதிலும் அதிகாரிகள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

பாதுகாப்புக்கவச உடைகள்

ஆஸ்திரேலியா தனது முதல் நான்கு பாதிப்புக்களை நேற்று இரண்டு வெவ்வேறு நகரங்களில் உறுதிப்படுத்தியத. மேலும் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா ஒரு பிரபலமான இடமாக இருப்பதால் அதிகமான வழக்குகளை ஆஸ்திரேலிய எதிர்பார்ப்பதாகக் கூறினார் நாட்டின் முக்கிய சுகாதார அதிகாரி ஒருவர்.

இதற்கிடையில், வுஹானில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 62 வயதான மருத்துவர் லியாங் வுடோங் வைரஸால் இறந்துவிட்டதாக சீனா அரசு நடத்தும் குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு வார கால சந்திர புத்தாண்டு விடுமுறைக்காக ஹூபே மாகாணத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களையும் மூடுவதாக அமெரிக்க காபி நிருவனம் ஸ்டார்பக்ஸ் (Starbucks) தெரிவித்துள்ளது. ஐந்து ஹூபே நகரங்களில் மெக்டொனால்ஸ¤ம் (McDonalds) இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளது.

பெய்ஜிங்கின் மத்திய இரயில் நிலையத்தில் சுரங்கப்பாதையில் நுழையும் பயணிகளின் வெப்பநிலையை வெள்ளை பாதுகாப்பு உடைகளில் உள்ள தொழிலாளர்கள் நேற்று சோதனை செய்தனர். அதே நேரத்தில் கிழக்கு யாங்சே நதி அருகே சில ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ரயில்வே நடத்துனர் தெரிவித்தார்.

உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்

விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் சீன பயணிகள் உலகெங்கும் செல்வதால், நோய் பரவுவதால் அதிகரிக்கும் அச்சம் பரவுகிறது. இருப்பினும் பல பயணிகள் தங்கள் திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்கள் சீனாவிலிருந்து வரும் பயணிகளை பிரத்யேக பரிசோதனை செய்கினறன. இருப்பினும் சில சுகாதார அதிகாரிகளும் நிபுணர்களும் இத்தகைய பரிசோதனைகள் பயனுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இத்தகைய முயற்சிகள் எவ்வாறு பயனில்லை என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டில், பாரிஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள், பிரான்சில் வைரஸ் கண்டறியப்பட்ட மூன்று சீன நாட்டினரில் இருவர் எந்த ஒரு அறிகுறிகளையும் காட்டாமலே நாட்டிற்குள் வந்துள்ளனர் என்று கூறினார்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் தொற்று நோய் நிபுணர்களின் அறிக்கை நேற்று இந்த தொற்றுநோய் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலைக் குறிக்கிறது என்றும் சீனாவால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது நிச்சயமற்றதுஎன்றும் தெரிவித்துள்ளது.

2002/2003 SARS என்ற கடுமையான சுவாச நோய் பரவலை மூடிமறைத்த சீனா, இப்போது நெருக்கடியை நிர்வகிப்பதில் வெளிப்படைத் தன்மையை காட்டுகிறது. தற்போதைய சூழ்நிலையைக் கையாளும் விதம் குறித்து வுஹானில் உள்ள அதிகாரிகள் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

புதிய மருத்துவமனை கட்டும் சீனா

ஆறு நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்க அதிகாரிகள் விரைந்து வரும் ஹூபே மாகாணம், சிகிச்சையில் வைரஸால் பாதிக்கப்பட்ட 658 நோயாளிகள் இருப்பதாக நேற்று அறிவித்தனர், அவர்களில் 57 பேர் மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,000 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், இரண்டாவதாக மற்றுமொரு அவசர நிலை மருத்துவமனை இரண்டே வாரங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளதாக அரசு செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய மருத்துவமனையில் 1,300 நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள்.

ஷாங்காய் டிஸ்னிலேண்ட் Shanghai Disneyland நேற்று முதல் மூடப்பட்டது. பெய்ஜிங்கின் லாமா கோயில் Beijing’s Lama Temple, மற்றும், மேலும் சில கோயில்களும் மூடப்பட்டுள்ளன.