NBA கூடைப்பந்தின் சர்வதேச நட்சத்திரங்களில் ஒருவறான கோபே பிரையன்ட் ஞாயிற்றுக்கிழமை அன்று லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 41. இந்த விபத்தில் அவரது 13 வயது மகள் மற்றும் விமானத்தில் இருந்த ஏழு பேரும் உடன் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரையன்ட் 18 வயதிலிருந்தே கூடைப்பந்தாட்டத்தில் புகழ் பெற்றார். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகள் விளையாடினார். அவரது மரணம் தேசிய கூடைப்பந்து கழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தேசிய கூடைப்பந்து கழகத்தை சர்வதேச னிலைக்கும் உலகெங்கிலும் முன்னேற உதவியவர் கோபே பிரையன்ட்.
மத்திய லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வடமேற்கே 40 மைல் (65 கி.மீ) தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் கலாபாசஸில் உள்ள மலைப்பாங்கான நிலப்பரப்பில் காலை 10 மணியளவில் (1800 ஜிஎம்டி) இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் உயிர் பிளைத்தவர்கள் யாரும் இல்லை. பைலட் மற்றும் எட்டு நபர்களுடன் விமானத்தில் ஒன்பது பேர் இருந்தனர்.
கோபே பிரையன்ட் மற்றும் அவரது மனைவி வனேசா ஆகியோருக்கு கியானா, நடாலியா, பியான்கா மற்றும் காப்ரி ஆகிய நான்கு மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் விபத்தில் இறந்து விட்டார்.
2018 ஆம் ஆண்டில், அவர் தனது அனிமேஷன் குறும்படமான “Dear Basketball” / “அன்புள்ள கூடைப்பந்திற்கு” ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார்.
கூடைப்பந்து விளையாட்டின் வரலாற்றில் புகழ்பெற்ற சாதனைகளுடன் மிகவும் அசாதாரண வீரர்களில் ஒருவராக இருந்த கோபேவிற்கு, உலகெங்கும் அஞ்சலிகள் குவிகின்றன.
‘Kobe we love you and will miss you’