கொரோனா வைரஸ் | விரைவாக பரவி வரும் கொரோனா வைரஸின் அறிகுறிகளுக்கான சிகிச்சையாக சீனா எச்.ஐ.வி மருந்தை பரிசோதித்து வருவதாக மருந்து தயாரிப்பாளர் ஏபிவி இன்க் [AbbVie Inc.] ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
விரைவாக பரவும் நோய் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுமாறு சீன சுகாதார அதிகாரிகள் இந்த மருந்தைக் கோரியுள்ளனர்.
கலேத்ரா Kaletra என்றும் அழைக்கப்படும் அலுவியா [Aluvia], லோபினாவிர் [lopinavir] மற்றும் ரிடோனாவிர் [ritonavir] ஆகியவற்றின் கலவையாகும்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வழிகாட்டி அறிக்கையில், அரசாங்கம், எந்தவொரு வைரஸ் எதிர்ப்பு மருந்தும் இல்லை என்று கூறியது. ஆனால் இரண்டு லோபினாவிர் / ரிடோனாவிர் மாத்திரைகளை உட்கொண்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை நெபுலைஸ் செய்யப்பட்ட ஆல்பா-இன்டர்ஃபெரானை உள்ளிழுத்து சுவாசிக்கும் படியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 2,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 56 பேர் உயிரிழந்திருக்கும் தொற்றுநோயைத் தடுக்க உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.