வுஹான் வைரஸ் – நாட்டில் மேலும் மூன்று சீனா பிரஜைகள்

கொரோனா வைரஸ் | கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று சீன பிரஜைகள் கண்காணிப்பிற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் பிந்துலு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் லங்காவி மருத்துவமனையில் ஆய்வக சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.