”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – உலக சுகாதார நிறுவனம் பிரகடனம்

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு (WHO) வியாழக்கிழமை, சீனாவில் 213 பேரைக் கொன்ற கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, ‘உலகளாவிய அவசரநிலை எச்சரிக்கை’ என்று அறிவித்துள்ளது. பாதிப்பு குறைந்தது 18 நாடுகளுக்கு பரவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூபே மாகாணத்தின் சுகாதார ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி 42 கூடுதல் இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. இது 24 மணி நேரத்தில் 1,220 புதிய உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பை அறிவித்தது.

சமீபத்திய WHO தரவுகளின்படி உலகளவில், கண்டறியப்பட்ட 9,480க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகள் பெரும்பாலானவை சீனாவில் உள்ளன. வுஹான் நகரில் சட்டவிரோத வனவிலங்கு சந்தை ஒன்றில் இந்த வைரஸ் தோன்றியது என அறியப்படுகிறது.

ஜெனீவாவில் ஒரு செய்தி மாநாட்டில் சீனாவின் பதிலை WHO இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டினார். ஆனாலும் வைரஸ் பரவுவதை வசதி இல்லாத நாடுகள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பது குறித்து WHO கவலை கொண்டுள்ளது என்றார்.

“இந்த பிரகடனதுக்கு முக்கிய காரணம் சீனாவில் என்ன நடக்கிறது என்பதனால் அல்ல. ஆனால், மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பது தான். பலவீனமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் தான் எங்கள் மிகப்பெரிய கவலை. இந்த பிரகடனத்தினால் அனைத்து நாடுகளுக்கும் இறுக்கமான கட்டுப்பாடு மற்றும் தகவல் பகிர்வு வழிகாட்டுதல்களைத் தூண்டும்” என்று கெப்ரேயஸ் கூறினார்.

சீனாவிற்கு வெளியே ஒருவருக்கு ஒருவர் வைரஸ் பரவும் பாதிப்புகள் குறித்து அக்கறை கொண்டுள்ளனர் வல்லுநர்கள். இந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதற்கான அதிக ஆற்றலைக் குறிக்கிறது.

“சீனாவுக்கு வெளியே உள்ள பெரும்பாலான தொற்று பாதிப்புகள் உள்ளவர்கள் வுஹானுக்கு பயணித்த வரலாறு உள்ளவர்கள் அல்லது வுஹானுக்கு பயண வரலாற்றைக் கொண்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட வரலாறு உள்ளவர்கள்” என்று கெப்ரேயஸ் கூறினார்.

“ஒரு சர்வதேச அவசரநிலை பிரகடனம் சந்தேகத்திற்கு இடமின்றி குடிமக்களைப் பாதுகாப்பதில் அரசாங்கங்களின் கவனத்தை கூர்மைப்படுத்தும்” என்று வெல்கம் டிரஸ்டின் இயக்குனர் ஜெர்மி ஃபர்ரர் கூறினார். போதிய பொது சுகாதார நடவடிக்கைகள் அனைத்து நாடுகளுக்கும் ஒரு “சவாலாக” இருக்கும், ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

பொருளாதார தாக்கம்

சீனாவுடனான பயணங்கள் அல்லது வர்த்தகம் மீதான கட்டுப்பாடுகளை WHO “பரிந்துரைக்கவில்லை – உண்மையில் இக்கட்டுப்பாடுகளை WHO எதிர்க்கிறது” என்று கெப்ரேயஸ் கூறினார்.

ஆயினும்கூட, வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை ஹூபேயில் இருந்து தங்கள் நாட்டிற்கு கொண்டுவந்து அவர்களை தனிமைப்படுத்தலில் வைத்திருக்கின்றன. அதே நேரத்தில் ஏர் பிரான்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு பறப்பதை நிறுத்திவிட்டன.

2002-2003 கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) தொற்றுநோயை விட இதன் தாக்கம் பெரிதாக இருக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர், SARS சுமார் 800 பேரைக் கொன்றது. உலகப் பொருளாதாரத்திற்கு 33 பில்லியன் அமெரிக்க டாலர் செலவானதாக தெரியவுள்ளது. சீனா இப்போது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வைரஸ் பற்றிய செய்தி வெளிவந்ததிலிருந்து பங்குச்சந்தைகள் மோசமாகிவிட்டன.

சீனாவில், சீனப்புத்தாண்டு விடுமுறை இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலை தொழிலாளர்கள் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அடுத்த வாரம் மீண்டும் வேலைக்குச் செல்ல போராடக்கூடும். ஹூபேயில் உள்ளூர்வாசிகளும் எதிப்பாராத ஒரு புதிய வாழ்க்கையை வாழ்கின்றனர்.

“பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. நாங்கள் வெளியே சென்று உணவு வாங்க முடியாது” என்று வுஹானில் சிக்கியுள்ள மியான்மரைச் சேர்ந்த 60 மாணவர்களில் ஒருவர், பர்மா ஜனநாயகக் குரல் என்ற ஆன்லைன் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“உண்மையில், என்னிடம் ஒரு பெரிய உருளைக்கிழங்கு மற்றும் மூன்று நூடுல்ஸ் பேக்கெட் மற்றும் கொஞசம் அரிசி உள்ளது” என்று அவர் கூறினார். – ராய்ட்டர்ஸ்