கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டுவரும் வுஹான், ஹூபே மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் பதிவை நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது கல்வி அமைச்சு (MoE).
எவ்வாறாயினும், சீனாவின் பிற மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் மலேசியாவில் படிப்பதற்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் அந்தந்த கற்றல் நிறுவனங்களால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்கள்.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசியாவில் உள்ள அனைத்து கற்றல் நிறுவனங்களுக்கும் MoE அறிவுறுத்தியது.
“இது, கல்வியாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் மற்றும் சீனாவிலிருந்து திரும்பி வந்த மாணவர்களின் சுகாதார நிலையை கண்காணிப்பதும் அடங்கும்” என்று MoE கூறியுள்ளது.
- பெர்னாமா