பெட்டாலிங் ஜெயா: மறைந்த துன் வி.டி.சம்பந்தனின் மனைவி தோ புவான் உமா சம்பந்தன் அவர்கள் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் காலமானார்.
அவருக்கு 90 வயது ஆகிறது.
சம்பந்தன் மஇகாவின் ஐந்தாவது தலைவராகவும், துங்கு அப்துல் ரஹ்மான், தான் செங் லாக் ஆகியோரைப் போல முன்னோடித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
1955 முதல் 1973 வரை ம.இ.கா.-வின் தலைவராக இருந்தார்.
பல்வேறு அமைச்சரவையில் அமைச்சராக வகித்தார் – தொழில் துறை (1955-57), சுகாதாரத் துறை (1957-59), பொதுப்பணி மற்றும் தொலைத்தொடர்பு (1959-71), தேசிய ஒற்றுமை (1972-74).
1973 ஆகஸ்டில் பிரதம மந்திரி துன் அப்துல் ரசாக் கனடாவில் ஒரு மாநாட்டில் இருந்த போது, துணை பிரதமர் துன் டாக்டர் இஸ்மாயில் இறந்துவிட்டார். அப்போது சம்பந்தன் அவர்கள் ‘ஒரு நாள்’ பிரதமராகவும் இருந்தார்.
உமா சம்பந்தன் அவர்கள் ஒரு ஆர்வலர், சமூக சேவகர் மற்றும் மலேசியாவில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னணி நபராக இருந்தவர். அவர் தனது பொதுத் தொண்டு பணிகளுக்காகவும் பெண்களின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகளுக்கான குரல் எழுப்புவராகவும் நன்கு அறியப்பட்டார்.
அவர் தேசிய மகளிர் அமைப்பு/National Council of Women’s Organisations (NCWO) நிறுவனர்களில் ஒருவராகவும், ஒரு கட்டத்தில் அதன் தலைவராகவும் இருந்தார்.
1980 முதல் 1995 வரை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் / National Land Finance Cooperative Society (NLFCS) தலைவராகவும், இயக்குநராகவும், 1995 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் அதன் தலைவராகவும் இருந்தார். NLFCS, 1960களின் முற்பகுதியில் தோட்டங்கள் சிதைவதைத் தடுக்க, அவரது கணவரால் நிறுவப்பட்டது. – தி ஸ்டார்