அறிவியல் மற்றும் கணிதம் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும் – டாக்டர் மகாதீர் விரும்பம்.
கல்வி அமைச்சர் டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் அறிவியல் மற்றும் கணிதத்தை ஆங்கிலத்தில் கற்பிக்க அறிவுரைத்துள்ளார். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது கல்வியின் முக்கிய அங்கமாகும் என்றார்.
“புவியியல் மற்றும் வரலாறு பாடங்களை எந்த மொழியிலும் கற்கலாம், ஆனால் அறிவியல் மற்றும் கணிதம், அறிவின் பூர்வீக துறைகள் அல்ல, அது வெளிநாட்டிலிருந்து வருகிறது. இது பெரும்பாலும் ஆங்கிலத்தில் நமக்கு வருகிறது. எனவே, அறிவியல் மற்றும் கணிதம் கற்பிப்பதில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தப் போகிறோம்.
“மலாய் மொழியில் அறிவியலைப் படிப்பவர்கள் ஆங்கிலம் தேவைப்படும் இடத்தில் வேலை செய்ய முடியவில்லை, என்பதை நாங்கள் காண்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், புதிய கற்பித்தல் கொள்கை எவ்வாறு அல்லது எப்போது செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.
“எனது கருத்துக்கள் எப்போதுமே பிரபலமானவை அல்ல, பலரால் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் அல்ல. ஆனால் நம் குழந்தைகள், எதிர்காலத்தில், வாழ்க்கையின் சிக்கல்களைச் சமாளிக்க தெரிய வேண்டும் என்பதற்காக நான் சில விஷயங்களை உறுதியுடன் செயல்படுத்த வேண்டியுள்ளது. அதுதான் கல்வியின் நோக்கம்”, என்று அவர் கூறினார்.
2003 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் திட்டத்தை (PPSMI) டாக்டர் மகாதீர் அறிமுகப்படுத்தினார். ஆனால், பி.கே.ஆர் போன்ற அப்போதைய எதிர்க்கட்சிகளிடையே கூட இந்த கொள்கை வரவேற்கப்படவில்லை.
பின், 2011-இல் இது அகற்றப்பட்டது. அப்போதய கல்வி அமைச்சர் முகிதீன் யாசின், இந்த திட்டத்தின் விளைவாக கிராமப்புற மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதத்தில் குறைந்த தேர்ச்சி பெறுகின்றனர், என்று கூறியிருந்தார்.
இது சிலரால் மறுக்கப்பட்டது. PPSMI கீழ் தேர்ச்சி முடிவுகள் மேம்பட்டுள்ளன என்று அவர்கள் கூறினார்.
2016-ஆம் ஆண்டில், அரசாங்கம் இரட்டை மொழித் திட்டத்தை (Dual Language Programme) அறிமுகப்படுத்தியது. இதில் சில பள்ளிகளுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை மலாய் அல்லது ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டுமா என்ற தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது.
இதற்கிடையில், நேற்று நடந்த கூட்டத்தில் மகாதீர், ஒரு பல்லின நாடாக இருப்பது சில சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தாலும், இது மலேசியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது என்றார்.