ஐ.ஜி.பி.-யின் அதிர்ச்சியூட்டும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’

இந்திரா காந்தியின் வக்கீல்கள் ஐ.ஜி.பி.-யின் ‘அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு’ அவமதிப்பு குற்றம் சாட்டி, 100மி வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முஹம்மது ரித்துவான் அப்துல்லா இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்துள்ளார்.

“அவர் (ரிடுவான்) எங்கே இருக்கிறார் என்பது பொதுமக்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும். இந்த விஷயத்தை இணக்கமாக தீர்க்கும் வகையில் அவரை முன் வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அப்துல் ஹமீத் படோர் கூறியதாக மலேசிய இன்சைட்.மேற்கோளிட்டுள்ளது.

பல வருடங்களுக்கு மேலாக இழுத்துச் செல்லப்பட்ட இந்த வழக்கில் ஒரு இணக்கமான தீர்வைக் காண அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். முகமது ரிதுவானை தலைமறைவிலிருந்து வெளியே வருமாறு அப்துல் ஹமீத் படோர் வலியுறுத்தினார்.

“தந்தையான ரிடுவான் இனி மறைந்திருக்க வேண்டாம். தாய் மற்றும் தந்தை இருவருக்கும் தங்கள் மகளின் மீது உரிமை உண்டு”.

“நான் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன், குறிப்பாக அந்த சிறுமி ஒரு மகிழ்ச்சியான முடிவை பெற நான் விரும்புகிறேன். அம்மாவாக இந்திரா கடந்து வந்த விரக்தியை நான் புரிந்துகொள்கிறேன். அவர் தனது மகளை நேசிக்கிறார் என்பது எனக்குத் தெரியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், இன்று காலை KLIA-இல் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ஹமீத் படோர், இந்த வழக்கு விரைவில் தீர்க்கப்படும் என்று நம்பிக்கையளித்தார்.

“இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

அவருக்கு எதிராக இந்திராவின் 100மி வழக்கைப் பொறுத்தவரை, மூன்று குழந்தைகளின் தாயான அவருக்கு அவ்வாறு செய்ய உரிமை உண்டு என்றும் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் காவல்துறைத் தலைவர் கூறினார்.

“அவர் என்மீதும் அரசாங்கத்தின் மீதும் வழக்குத் தொடர விரும்பினால், அது அவருடைய விருப்பம். நான் எதுவும் சொல்லவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

வழக்கறிஞர்கள் அதிர்ச்சி

எம். இந்திரா காந்தியின் வழக்கறிஞர்கள், தங்கள் கட்ச்சிக்காரரின் முன்னாள் கணவர் முஹம்மது ரித்துவான் அப்துல்லா இருக்கும் இடம் தெரிந்து அப்துல் ஹமீத் படோர் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியளிப்பதாக விவரித்தனர்.

இதைக் கருத்தில் கொண்டு, அப்துல் ஹமீத் படோர் மற்றும் காவல்துறையினர் மீதான RM100 மில்லியனுக்கும் எதிராக வழக்குத் தொடுக்கும் திட்டம் விரைவுபடுத்தப்படலாம் என்று ராஜேஷ் நாகராஜன் கூறினார்.

தந்தையும் மகளும் எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் தந்தையை கைதுசெய்து குழந்தை பிரசன்னா தீட்சாவை தனது தாயிடம் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக காவல்துறை தலைவர் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.