கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படும் போது நோயாளி வெளியேறினார்

கொரோனா வைரஸ் | சந்தேகத்திற்குரிய கொரோனா வைரஸ் சிகிச்சையின் நடுவில் 24 வயது நோயாளி காணாமல் போனதை அடுத்து சுங்கை புலோ மருத்துவமனை காவல்துறைக்கு புகார் செய்தது.

அந்த அறிக்கையின்படி, ராவாங்கைச் சேர்ந்த அந்நோயாளி, இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், இருமல் இருப்பதாகவும் கூறி இரவு 1.05 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஜனவரி 19 முதல் 26 வரை சீனாவில் இருந்தார் என்றும், இதுவரை 213 உயிர்களைக் கொன்ற வைரஸின் மையப்பகுதியான வுஹானில் இரண்டு நாள் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

மருத்துவமனை அவரை கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கத் தொடங்கி, தொற்று நோய்கள் வார்டில் காத்திருக்கும்படி அவரிடம் கேட்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் மருத்துவமனை ஊழியர்கள் அவர் காணவில்லை என்பதை உணர்ந்தனர். அவர்கள் உடனே காவல்துறக்கு தொடர்பு கொண்டனர்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் நூர் அசாம் ஜமாலுதீனைத் தொடர்பு கொண்டபோது, அந்த நபர் தப்பி ஓடவில்லை என்று கூறி சம்பவத்தை உறுதிப்படுத்தினார். நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருந்த பின்னே வீடு திரும்புவதற்கான முடிவை எடுத்தார் என தெரியவந்துள்ளது.

“நாங்கள் அவரை அழைத்தபோது அவர் ஒதுழைப்பு அழித்து நேர்மையாக பதிலளித்தார். இப்போது அவர் சுங்கை புலோ மருத்துவமனைக்கு கவனிப்புக்காக திரும்பியுள்ளார்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.