நிர்பயா வழக்கு குற்றவாளிகளை இன்று தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மறு உத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. – bbc.tamil