நாற்பது மலேசிய மாணவர்கள் சீனாவிலிருந்து திரும்பி வந்துள்ளனர் – விஸ்மா புத்ரா

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து, நாற்பது மலேசிய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெய்ஜிங்கில் படித்து வருகின்றனர்.

நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், விஸ்மா புத்ரா, அனைத்து மாணவர்களும் மலேசியா திரும்பியதும் விமான நிலையத்தில் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன்பிறகு 14 நாட்களுக்கு அவரவர் வீடுகளில் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“இதுவரை, திரும்பி வந்த மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். மாணவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் சுகாதார அமைச்சால் ஒரு மதிப்பீட்டு கருவி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை, மலேசியாவில் வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட எட்டு பாதிப்பு பதிவுகள் உள்ளன. இவை அனைத்தும் சீன நாட்டினரை உள்ளடக்கியதாகும்.

ஹூபே மாகாணத்திலிருந்து 117 மலேசியர்களும் நாடு திரும்புவதற்கு அரசாங்கம் தற்போது முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. – பெர்னாமா