சீனாவில் 46 புதிய கொரோனா வைரஸ் இறப்புகள்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை இறுதிக்குள் 259-ஐ எட்டியுள்ளது. 46 புதிய இறப்பு அதிகரிப்பு என்று சீனா நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பாளர் சி.சி.டி.வி தெரிவித்துள்ளது.

தொற்றுநோயின் மையமான ஹூபே மாகாணத்தின் உள்ளூர் சுகாதார ஆணையம் சனிக்கிழமையன்று வெள்ளிக்கிழமை பாதிப்பிலிருந்து 45 புதிய இறப்புகளைப் பதிவுசெய்து, மொத்த இறப்புகளை 249ஆக உயர்த்தியது.

சாலைகள் மூடப்பட்டு பொது போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், மாகாணம் முழுமையான தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளது. ஆனால் சிறிய எண்ணிக்கையிலான பயணிகள் தொடர்ந்து இந்த கட்டளைகளை மீறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை சர்வதேச அக்கறையின் பால், பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

சீனா முழுவதும் உள்ள நகரங்கள் நோய்க்கிருமிகளின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. சுமார் 15 மில்லியன் மக்களைக் கொண்ட வடக்கு சீனாவில் உள்ள நகரமான தியான்ஜின், மேல் அறிவிக்கப்படும் வரை அங்குள்ள பள்ளிகளும் வணிகங்களும் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது.

இந்த வைரஸ் மேலும் வெளிநாடுகளில் பரவக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், சமீபத்தில் சீனாவில் இருந்த வெளிநாட்டினருக்கு நுழைவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் மூன்று முக்கிய விமான நிறுவனங்களும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கான விமானங்களை ரத்து செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தன.

  • ராய்ட்டர்ஸ்