SETIU, பிப்ரவரி 1 – விவசாய மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்துறை அமைச்சு (MOA), கடந்த ஆண்டு திரங்கானுவில் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட 47 விவசாயிகளுக்கு ‘தபூங் பென்சானா தனமான் பாடி’யிலிருந்து / ‘Tabung Bencana Tanaman Padi’ மொத்தம் RM92,235 உதவியை வழங்கியுள்ளது.
அதன் அமைச்சர் டத்தோ செரி சலாவுதீன் அயூப், செத்தியுவில் பி.பி.கே (Area Farmer’s Organisation (PPK)) கீழ் உள்ள விவசாயிகள் அமைப்பின் 18 நெல் விவசாயிகளுக்கு ரி.ம.51,051 வழங்கப்பட்டதாகவும், கோலா திரங்கானுவின் பி.பி.கே கீழ் வெள்ளத்தால் சேதமடைந்த வயல் விவசாயிகளுக்கு ரி.ம. 41,184 வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்த 260 விவசாயிகளுக்கு, தேசிய உழவர் அமைப்பு (NAFAS )RM15,000 வழங்கியது.
“ஒரு பேரழிவு காரணமாக விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டால் அவர்கள் நலன் கவனிக்கப்படுவதை அமைச்சு உறுதி செய்யும்” என்று அவர் கூறினார். ‘தபூங் பென்சானா தனாமான் பாடி’ மற்றும் ‘தபுங் பந்துவான் பென்சானா அக்ரோ மக்கானன்’ (வேளாண் உணவு பேரழிவு உதவி) விளக்கக்காட்சி விழாவில் அவர் கூறினார்.
திரங்கானுவில் 15 பி.பி.கே கீழ் 47,235 விவசாயிகள் உள்ளனர்.
விவசாயிகள், வழங்கப்பட்ட உணவு உதவிக்கு எல்.பி.பி-க்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று பெர்னாமாவிடம் கூறினர்.
62 வயதான அஜீஸ் எம்போங்: “ஒவ்வொரு முறையும் எனது காய்கறி பண்ணை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது பெரும் கஷ்டமாக இருக்கும். இந்த உணவு உதவி வீட்டுச் செலவுகளைக் குறைக்க உதவுகிறது” என்றார்.
- பெர்னாமா