அமெரிக்காவில் பொது சுகாதார அவசர பிரகடனம்

டிரம்ப் நிர்வாகம், கொரோனா வைரஸிலிருந்து அமெரிக்கர்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாக வலியுறுத்தி வந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று ஒரு பொது சுகாதார அவசர பிரகடனத்தை அறிவித்தது. சீனாவுக்கு பயணம் செய்த வெளிநாட்டினர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் அதிரடி தடை நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதோடு, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, கடந்த இரண்டு வாரங்களுக்குள் சீனாவின் ஹூபே மாகாணத்திற்கு பயணம் செய்த அமெரிக்க குடிமக்கள், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்தது அமெரிக்கா.

அதோடு, சீனாவிலிருந்து வரும் அனைத்து வணிக விமானங்களும் ஏழு அமெரிக்க விமான நிலையங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளன.

தொற்று நோய் பரவுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை உலக சுகாதார அவசரநிலையை பிரகடனபடுத்திய பின்னரே அமெரிக்க அரசு இவ்வாறு செயல்படுகிறது. – Reuters