மகள் என்னுடன் இல்லையென்றால் ‘மகிழ்ச்சியான முடிவு’ இல்லை, விரக்தியில் இந்திரா

தனது மகளோடு மீண்டும் ஒன்றிணைக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோரை கேட்டுக் கொண்டார் எம். இந்திரா காந்தி.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திரா, விரைவில் 12 வயதாகும் பிரசன்னா தீக்சாவிடமிருந்து 10 வருடங்களுக்கும் மேலாக பிரிந்துவிட்டுள்ளதாகவும், காத்திருப்புக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் எதிர்பார்க்கிறார், என்றார்.

“போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்ததை கேட்டு நான் மிகவும் இடிந்துபோயுள்ளேன்” என்றார் இந்திரா காந்தி.

கே.பத்மநாதன் அல்லது முஹம்மது ரித்துவான் அப்துல்லா இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் படோர் நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர்கள் அதிர்ச்சி

எம். இந்திரா காந்தியின் வழக்கறிஞர்கள், தங்கள் கட்சிக்காரரின் முன்னாள் கணவர் முஹம்மது ரித்துவான் அப்துல்லா இருக்கும் இடம் தெரிந்து அப்துல் ஹமீத் படோர் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியளிப்பதாக நேற்று விவரித்தனர்.

இதைக் கருத்தில் கொண்டு, அப்துல் ஹமீத் படோர் மற்றும் காவல்துறையினர் மீதான RM100 மில்லியனுக்கும் எதிராக வழக்குத் தொடுக்கும் திட்டம் விரைவுபடுத்தப்படலாம் என்று ராஜேஷ் நாகராஜன் நேற்று கூறினார்.

தந்தையும் மகளும் எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் தந்தையை கைதுசெய்து குழந்தை பிரசன்னா தீட்சாவை தனது தாயிடம் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக காவல்துறை தலைவர் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளார் என்றும் அவர் நேற்று குற்றம் சாட்டினார்.