PPSMI செயல்படுத்தலின் சிக்கல்கள் உள்ளன – பி ராமசாமி

பிரதம மந்திரி டாக்டர் மகாதிர் முகமது ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் பற்றிய அறிவிப்பு (PPSMI) பலதரப்பட்ட கருத்துக்களை பெற்றுள்ளது.

செயல்படுத்தலின் உண்மையான சிக்கல்களை அறிந்திருந்தாலும், நடைமுறை கல்வியாளர்கள் இந்த கொள்கையை வரவேற்றுள்ளனர்.

எவ்வாறாயினும், PPSMI நடைமுறைக்கு வருவது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய கொள்கை, தேசிய மொழியாகவும், பல இன மலேசியர்கள் தொடர்பு கொள்ளும் முக்கிய ஊடகமாகவும் அமைந்துள்ள மலாய் மொழியின் முக்கியத்துவத்தை குறைக்கக்கூடும் என்கின்றனர்.

அறிவியல் மற்றும் கணிதம் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்ற பரவலான கருத்துக்கு PPSMI அறிமுகம் முரண்படக்கூடும் என்று கருதுபவர்களும் உள்ளனர்.

அதிகப்படியான தேசியவாதம் (nationalism) மற்றும் இனக்கொள்கை ஆகியவை நமது இளைய தலைமுறையினரை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தின் உலகளாவிய சவால்களை அடைவதைத் தாமதப்படுத்தக்கூடும் என பிரதமர் கூறுவதும் ஒருவகையில் உண்மைதான்.

இரட்டை மொழித் திட்டத்தை (டி.எல்.பி) / Dual Language Program (DLP), ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஆங்கிலத்தில் போதிக்க ஆசிரியர்களிடையே திறமை இல்லாமை போன்ற நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

நன்கு ஆலோசித்து நடைமுறைப்படுத்தப்படும் கல்விக் கொள்கைகளுக்கு பொது மக்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இவை ஏன் காலப்போக்கில் தொடர்ந்து பின்பற்றப்படுவதில்லை என்பது தான் புரிந்துகொள்ளமுடியவில்லை.

2003-ஆம் ஆண்டில் PPSMI அறிமுகப்படுத்தப்பட்டு பின் ஏன் பல தரப்பிலிருந்து வந்த எதிர்ப்பின் விளைவாக கைவிடப்பட்டது?

இந்தக் கொள்கையை கொண்டு வருவதில் மகாதீர் சரியாக இருந்தாலும், இதை செயல்படுத்தப்படுவதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம், மற்றும் கவனமாக திட்டமிடப்பட வேண்டிய ஒன்றும் ஆகும்.

எதிர்காலத்தில், மகாதீர் பிரதமராக இல்லாதபோது இந்த கொள்கை தொடர்ந்து பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

இன்றைய நிலையில், தீவிரமான மத பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, மலேசியாவில் பல நல்ல கொள்கைகள், குறிப்பாக கல்வித்துறையில், நிறைவேற்றப்படாமலும் சாத்தியப்படாமலும் போவது உண்மையானது.

மகாதீரின் PPSMI பற்றிய அறிவிப்பு ஒரு தொடக்கமாக இருக்கலாம், ஆனால் செயல்படுத்தும் விவரங்களில் பல சிக்கல்கள் உள்ளன என்பது உண்மை.

em>பி ராமசாமி, பிராய் சட்டமன்ற உறுப்பினர். பினாங்கு மாநிலத்தின் இரண்டாம் துணை அமைச்சராகவும் உள்ளார். இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் படைப்பாளர் / பங்களிப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே. அவை மலேசியாகினியின் கருத்துக்களைக் குறிக்கவில்லை.