மலேசியர்களை நாட்டுக்கு திரும்பக் கொண்டுவரும் முயற்சிகளை ஒருங்கிணைக்க மலேசிய தூதரக குழு வுஹானுக்கு சென்றது.
ஹூபே மாகாணத்திலிருந்து 120 மலேசியர்களை நாட்டுக்கு திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சியை ஒருங்கிணைக்க, ஆறு மலேசிய தூதரக அதிகாரிகள் அடங்கிய குழு வுஹானுக்கு சென்றுள்ளது.
கொரோனா வைரஸ் இதுவரை 304 உயிர்களைக் கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 13 மணி நேரம் பயணத்திற்குப் பின்னர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த குழு அங்கு சேர்ந்துள்ளது. அங்கு உள்ள மலேசியர்களின் பட்டியலைத் தொகுக்க இந்த ஆறு தூதரக அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டனர்.
இந்த குழு, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மலேசியர்களை திருப்பி அனுப்பும் பணியில் செயல்படும். சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் விமானங்களில் நாடு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.