வுஹானில் இருந்து மலேசியர்கள் நாடு திரும்பினர்

2019 கொரோனா வைரஸின் (2019-nCoV) மையப்பகுதியான சீனாவின் வுஹானில் இருந்து மலேசிய நாட்டினரை கொண்டு வரும் சிறப்பு விமானம் இன்று அதிகாலையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு (KLIA) 5.57 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.

வுஹான் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானத்தில் மலேசியர்கள் மற்றும் அவர்களின் மலேசியரல்லாத வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய மொத்தம் 107 நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள், 12 விமான பணியாளர்கள், எட்டு Humanitarian Assistance and Disaster Relief (HADR) பணியாளர்கள் இதில் அடங்குவர்.

மலேசியா வந்தடைந்த விமானத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று நேற்று துணை பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

அறிகுறிகளுடன் கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள், மற்றவர்கள் பேருந்து மூலம் கண்காணிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

  • பெர்னாமா