மலேசியாவிற்கு பொருளாதார ஊக்கம் தேவை
சமீபத்திய கொரோனா கிருமி பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் மலேசியாவிற்கு ஒரு பொருளாதார ஊக்க முறையை கொண்டு வருமாறு அமைச்சரவை நிதி அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த பாதிப்பு பொதுவாக பொருளாதாரத்திலும், குறிப்பாக சுற்றுலாத் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
அதன் விவரங்களை அறிவிப்பதற்கு முன், தனது அமைச்சு பொருளாதார விவகார அமைச்சு, சுற்றுலா அமைச்சு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுடன் கலந்துரையாட வேண்டும் என்று லிம் கூறினார்.
தொழில்கள் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடனும் தனது அமைச்சு கலந்து ஆலோசிக்கும் என்று அவர் கூறினார்.
இன்று காலை அமைச்சரவை கூடியது.
இதுவரை கொரோனா கிருமி 24,542 பேரை பாதித்து 492 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து இறப்புகளும் முற்றிலும் சீனாவில் நிகழ்ந்துள்ளன.
இது சுற்றுலா, விமான பயணத் துறையை பாதித்து, ஆசியா முழுவதும் பங்குச் சந்தைகளையும் சரியச்செய்துள்ளது.