கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 563-ஆக உயர்ந்தது
கொரோனா கிருமி : சீனா புதன்கிழமையன்று, 73 புதிய இறப்பு எண்ணிக்கையை பதிவுசெய்தது. கிருமி தொற்றுலிருந்து, அதிகமான எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என்று தெரியப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 73 பேர் புதன்கிழமையன்று இறந்தனர். இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தினசரி அதிகரிப்பு என்றும், மொத்த இறப்பு எண்ணிக்கையை இது 563-ஆக உயர்ந்துள்ளது என்றும் நாட்டின் சுகாதார ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 5 ஆம் தேதி நாடு முழுவதும் மேலும் 3,694 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது, இது மொத்த எண்ணிக்கையை 28,018 ஆக உயர்த்தி உள்ளது.
தொற்றுநோயின் மையப்பகுதியான ஹூபே மாகாணம் முன்னதாக புதன்கிழமை 70 இறப்புகளையும், 2,987 புதிய உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளையும் அறிவித்தது. இது மொத்தத்தில் 80% க்கும் அதிகமானவையாகும்.
- ராய்ட்டர்ஸ்