ஜப்பானில் உல்லாசப் பயணக் கப்பலில் மேலும் பத்து பேர் கொரோனா வைரஸுக்கு பாதிப்பு

ஜப்பானில் உல்லாசப் பயணக் கப்பலில் மேலும் பத்து பேர் கொரோனா வைரஸுக்கு பாதிப்பு

முன்னதாக, கொரோனா கிருமித் தொற்றியிருப்பது கண்டறியப்பட்ட பின்னர், மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் ஜப்பானிய உல்லாசக் கப்பல் ஒன்று, ஜப்பானியக் கடல் பகுதியிலேயே தனித்து வைக்கப்பட்டது.

ஹாங்காங்கில் இருந்த சமயத்தில், கப்பலில் இருந்து வெளியேறியிருந்த ஒரு பயணியிடம் மருத்துவப் பரிசோதனைச் செய்யப்பட்டபோது, அவருக்கு அக்கிருமித் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

DIAMOND PRINCESS என்ற இந்த உல்லாசக் கப்பல், திங்கட்கிழமையன்று, யோக்கோஹாமா வந்தடைந்தபோது அது தனித்து வைக்கும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

பின்னர் அக்கப்பலினுள் நுழைந்த அதிகாரிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், கப்பலில் இருக்கும் அனைவரிடமும் மருத்துவப் பரிசோதனையைச் செய்தனர். இந்த உல்லாசக் கப்பலில் உள்ள அனைவரின் சுகாதாரத்தையும் பரிசோதிப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று ஜப்பானிய உயர்நிலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அப்படி இருக்க, டோக்கியோவின் தெற்கே உள்ள யோகோகாமா துறைமுகத்தில் சிக்கியுள்ல அந்த உல்லாசக் கப்பலில் மேலும் பத்து பேர் கொரோனா வைரஸுக்கு பாதிப்புக்கு சோதனை செய்யப்பட்டதாக NHK வியாழக்கிழமை சுகாதார அமைச்சை மேற்கோளிட்டு தெரிவித்தது..

ஆரம்பத்தில் 10 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டு மருத்துவ வசதிகளுக்கு கப்பலில் இருந்து வெளியேறியனர். இதில் சுமார் 3,700 பேர் குறைந்தது இரண்டு வாரங்களாவது பயணக் கப்பலில் தனிமைப்படுத்தப்படுவர்.

புதிய நோய்த்தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டால், அது ஜப்பானில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை 45 ஆக உயர்த்தும்.

அவர்களும் அவர்களது உறவினர்களும் பயணக் கப்பலில் தங்களது இக்கட்டான சூழ்நிலைகளை சமூக ஊடகங்களில் விவரித்து வருகின்றனர்.

“கப்பல் பணி உறுப்பினர்கள் தேவைப்படுபவர்களுக்கு மருந்து நிரப்புதலுக்கான கோரிக்கை படிவங்களை வழங்கினர்:, என்று ஒரு பயணி வியாழக்கிழமை அதிகாலை ட்வீட் செய்துள்ளார்.

  • ராய்ட்டர்ஸ்