குடியுரிமை – விளையாட்டு வீரருக்கு விரைவு குடியுரிமை, விசுவாசமான உள்ளூர் மக்களுக்கு மறுக்கப்படுகிறது
எந்தவொரு நபரும் பெறக்கூடிய மிக உயர்ந்த விருதை பெற்றிருக்கிறார் லிரிடன் கிராஸ்னி/Liridon Krasniqi. மலேசியாவின் குடியுரிமையை பெற்று, மலேசிய குடிமகனாக ஆகி விட்டார். வெளிர் நீல நிற மைகாட் மற்றும் தங்கக் கோடுகளில் தேசிய முகட்டைத் தாங்கிய சிவப்பு பாஸ்போர்ட்டுக்கு உரிமையாளர் என்று இவர் இனி பெருமைபடலாம்.
ஏப்ரல் 9, 2015 கிராஸ்னிகி மலேசியா வந்து கெடா அணிக்காக விளையாடினார். இப்போது வரை சுமார் ஐந்து ஆண்டுகளாக கால்பந்து நட்சத்திர அலைகளில் சவாரி செய்து வருகிறார். மலேசியாவின் கால்பந்து சங்க (FAM) ஆடரவோடு, இயற்கைமயமாக (naturalisation) புத்ராஜெயாவில் தனது குடியுரிமையைப் பெற்றார்.
இயற்கைமயமாக்கல் மூலம் லிரிடன் கிராஸ்னிகி தனது குடியுரிமையைப் பெற்றார் என்பது உண்மை. கூட்டாட்சி அரசியலமைப்பில் (Federal Constitution) 19 (3)வது பிரிவில் தெளிவாகக் குறிப்பிட பட்டிருக்கும் விசயம்: “The periods of residence in the Federation or the relevant part of it which are required for the grant of a certificate of naturalization are periods which amount in the aggregate to not less than ten years in the twelve years immediately preceding the date of the application for the certificate, and which include the twelve months immediately preceding that date.” அதாவது சுருக்கமாக : இயற்கைமயமாக குடியுரிமைபெற ஒருவர் நாட்டில் எத்தனை ஆண்டுகள் வசித்துள்ளார் என்பது முக்கியம். விண்ணப்பத்தின் தேதிக்கு முந்தைய பன்னிரண்டு ஆண்டுகளில் மொத்தத்தில் பத்து வருடங்களுக்கும் குறையாத காலங்கள் ஆகும்.
அப்படியென்றால், கிராஸ்னிகி தன்னை மலேசியர் என்று அழைப்பதற்காக, இயற்கைமயமாக்கல் மூலம் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
கிராஸ்னிகி ஹரிமாவ் மலாயா அணியின் ஒரு பகுதியாக இருப்பார் என்று பல மலேசியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இன்னும் 80 மற்றும் 90 வயதிற்குட்பட்ட பல ஆண்களும் பெண்களும்,ஏன் குழந்தைகளும் கூட தங்கள் மைகாடிற்காக இன்னும் பொறுமையாக காத்திருக்கின்றனர். அவர்களும் ஒரு நாள், பெருமையுடன் மலேசியர் என்று உரிமை கிடைக்கும் என எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்; அவர்களும் ஒரு நாள் மலேசியர்களாக இருப்பார்கள் என்று எண்ணத்தை சிதைத்து, துரோகம் செய்யப்பட்டு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.
இந்த உரிமையையும் நாட்டின் அன்பையும் அனுபவிக்கும் முதல் நபர் அல்ல இவர். ராகத் வலீத் அல்-குர்தியின்/Ragad Waleed Al-Kurdi’ குடியுரிமை சூறாவளி வேகத்தில் வந்தது. ஆறு ஆண்டுகளில் அவர் ஒரு மலேசிய குடிமகன் ஆனார். GE13 மற்றும் 2016 இல் சரவாக் மாநிலத் தேர்தல்களில் வாக்களித்தவர். மேலும் “மாட் டான்”/ Mat Dan ஒரு பிரிட்டிஷ் குடிமகன், மலேசிய திரங்கானு மக்களின் இதயங்களை வென்றார். 2009 இல் மலேசியாவுக்கு வந்தபோது திரங்கானு மலாய் பேச்சுவழக்கில் தேர்ச்சி பெற்றார். அவர் 2013-இல் முஸ்லீமாக மாறினார், 2017 இல் மலேசியரை மணந்தார், பிப்ரவரி 2018-இல் அப்போதைய உள்துறை மந்திரி ஜாஹித் ஹமிடியிடமிருந்து தனது நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தைப் பெற்றார். அவருக்கே ஆச்சரியம் தான். பாரிசன் நேஷனல் தலைவர்களின் அறிவுறுத்தலின் கீழ் வி.ஐ.பி. மரியாதையுடன் உள்துறை அமைச்சகத்திலிருந்து “நிமிடங்களுக்குள்” நிரந்தர குடியிருப்பு பெற்ற ஜாகிர் நாயக்கை பறக்க முடியுமா? அவர், அவரது மனைவி மற்றும் அவரது அனைத்து குழந்தைகளுக்கும் நிரந்தர குடியிருப்பு வழங்கப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
மலேசியர்கள் என்று அழைக்க இன்னும் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் உள்ள நிலையில், ஒரு வெளிநாட்டு கால்பந்தாட்ட வீரருக்கான குடியுரிமை எவ்வாறு அவசர அவசரமாக தேவைகளை மீறி அளிக்கப்பட்டுள்ளது? காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமை பெருவது என்பது ஒரு கனவாகவே இருக்கின்றது. குடியுரிமை பற்றிய வெளிப்படையான மோதலும் முரண்பாடும், சில சமயங்களில் மர்மமானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு எனது நாடாளுமன்ற கேள்வியில், 2019 செப்டம்பர் வரை, நாடு முழுவதும், குடியுரிமை இல்லாத 1,933 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளதாக நலத்துறை (Welfare Department) பதிவு செய்தது. இதில் 1,098 ஆண் சிறுவர்கள் மற்றும் 835 பெண் சிறுமிகள் உள்ளனர். அவர்களில் 1,401 மலாய் குழந்தைகள், 148 இந்தியர்கள் மற்றும் 80 சீனர்கள். 864 குழந்தைகள் 15 வயது முதல் 18 வயது வரையிலும், 94 குழந்தைகள் 5-6 வயது பிரிவில் உள்ளனர். பொதுவாக, மலேசியாவில் பிறந்த இந்த அப்பாவி குழந்தைகளுக்கு குடியுரிமை பெற விண்ணப்பிப்பது பராமரிப்பாளரின் அல்லது பாதுகாப்பு இல்லங்களை நடத்துவர்களின் பொறுப்பாகும்.
இந்த குழந்தைகளுக்கு 18 வயதிற்குள் குடியுரிமை வழங்கப்படாவிட்டால், அவர்கள் ஆவணமற்ற, நாட்டுரிமை இல்லாத, நிலையற்ற மற்றும் குடியுரிமை அந்தஸ்து இல்லாத மனிதர்களாக உலகிற்கு வெளியே செல்கிறார்கள்.
இந்த அப்பாவி, தூய்மையான குழந்தைகளை நாம் ஏமாற்றிவிட்டோம் என்பதையும் தோல்வியுற்றோம் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஒரு நட்சத்திர கால்பந்து வீரர், அல்லது ஒரு மத போதகர் அல்லது மலாய் பேச்சுவழக்கில் சூரர் ஆன வீடியோ பதிவர் போன்றே இங்கு பிறந்த நம் நாட்டின் சொந்த குழந்தைகளின் வாழ்க்கையும் எதிர்காலமும் இல்லையா? மலேசியாவில் அவர்களைப் புறக்கணித்த அமைப்பு தான் அவர்களுக்கு ஒரு இடத்தை வழங்கப் போகிறது என்று அவர்கள் எப்படி நம்புவார்கள்?
உள்துறை அமைச்சகத்தின் தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி)/National Registration Department (NRD), 15ஏ பிரிவின் கீழ் 30,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் விண்ணப்பங்களை குடியுரிமை பெறுவதற்கான செயலாக்கத்தையும் ஒப்புதலையும் விரைவுபடுத்துகிறது என்பது பாராட்டத்தக்கது என்றாலும், பதவியில் உள்ள நபர்கள் முக்கியமானவர்களுக்கும், பிரபலமானவர்களுக்கும், மற்றும் நவநாகரீக பிரபலங்களுக்கும் தேர்ந்தெடுத்து குடியுரிமை வழங்குவதை பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.
14 வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஒரு ஆட்சி மாற்றம் இருந்தபோதிலும், இருண்ட மறைக்கப்பட்ட கைகள் மேலோங்கி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே குடியுரிமை வழங்குகின்றன; விதிகளை மீறுகின்றன; சட்டங்களுக்கு முரணானக செயல்படுகின்றன.
கிராஸ்னிகியின் குடியுரிமையை பதிவு செய்ய ஒப்புதல் அளித்த நபர்கள் அதே SOP அல்லது மோடஸ் ஆபரேண்டியை, குடியுரிமைக்கு விண்ணப்பித்த மற்றும் பல தசாப்தங்களாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் பயன்படுத்த வேண்டுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அதோடு, மலேசியாவிலேயே பிறந்தவர்களானாலும் – தங்களின் கல்வி மற்றும் மலிவு சுகாதாரத்துக்கான உரிமையை மறுக்கப்பட்டவர்களுக்கும், மலேசிய குடிமக்களாக மாறுவதற்கான உரிமையை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
மலேசியா பஹாருவில் மலேசியா குடிமக்களாக அவர்கள் தலையை உயர்த்திப் பிடிப்பதற்காக இதை செய்யுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் .
கஸ்தூரி பட்டு
பத்து கவானின் நாடாளுமன்ற உறுப்பினர்.
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் எழுத்தாளர் / பங்களிப்பாளரின் கருத்துக்கள் மற்றுமே. அவை மலேசியாகினியின் கருத்துக்களைக் குறிக்கவில்லை.