ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம்

ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம்

அங்காரா, பிப்ரவரி 6 – இஸ்தான்புல்லில் உள்ள விமான நிலையத்தில் புதன்கிழமையன்று பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கியதனால், அதில் மூன்று பேர் கொல்லப்பட்டு மற்றும் 179 பேர் காயமடைந்தனர் என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பிசி 2193 என்ற விமான எண்ணுடன் கூடிய The Pegasus Airlines / பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியின் ஏஜியன் மாகாணமான இஸ்மிர் நகரிலிருந்து சபிஹா கோக்கென்/Sabiha Gokcen International Airport சர்வதேச விமான நிலையத்தில் தரை இரங்கும் நேரத்தில் ஓடுபாதையில் இருந்து சறுக்கியது.

இச்சம்பவத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர். மற்றும் 179 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா / Fahrettin Koca.தெரிவித்தார்.

தொலைக்காட்சி காட்சிகள் விமானத்தின் முன்பகுதி மற்ற உருகிகளிலிருந்து முற்றிலும் பிரித்திருப்பதைக் காட்டியது, இதனால், விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பற்றி வெடித்தது.

கடினமான தரையிறக்கத்திற்குப் பிறகு, விமானம் சறுக்கியதாக தெரிகிறது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய பின்னர், விமானம் 50 மீட்டர் தூரம் வரை சென்றுள்ளது. பின்னர் இது சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து தலைநகர் அங்காராவில் வழக்குரைஞர்கள் விசாரணையைத் தொடங்கினர். விமான நிலையம் தற்காலிகமாக விமான போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் விமானங்களையும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக துருக்கிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. — பெர்னாமா