கபூல், ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபராக அஷ்ரப் கானி 70 இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அண்டை நாடான ஆப்கனில் கடந்தாண்டு செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை அடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஐந்து மாத தாமதத்துக்குப் பின் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆப்கன் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் அஷ்ரப் கானி 54 சதவீத ஓட்டுகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.தேர்தல் முடிவு குறித்து அஷ்ரப் கானி கூறுகையில் ”நாட்டுக்கு சேவை செய்ய ஆப்கன் மக்கள் எனக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளனர்; இது மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்றார்.
dinamalar