ஹராப்பான் அரசு கவிழ்ந்தது, எதிரிணிக்கு தெளிவான பெரும்பான்மை இல்லை
3.53PM | பெர்சத்துவில் இருந்து 26 எம்.பி.க்களும், பி.கே.ஆரைச் சேர்ந்த 11 எம்.பி.க்களும் கூட்டணியில் இருந்து விலகியதையடுத்து, பாக்காத்தான் ஹராப்பானுக்கு 102 இடங்கள் மட்டுமே இருக்கின்றன.
முகிதீன் யாசின் இன்று பெர்சத்து கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்தார். பி.கே.ஆரைச் சேர்ந்த அஸ்மின் அலி மற்றும் 11 எம்.பி.க்களும் விலகினார்.
இருப்பினும், இது ஹராப்பானின் எதிரிணிக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தெளிவான பாதையை இன்னும் உருவாக்கவில்லை.