எகிப்த் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மரணம்

கெய்யோ:எகிப்தின் முன்னாள் அதிபர், ஹோஸ்னி முபாரக், 91, நேற்று இறந்தார், ஆப்ரிக்க நாடான எகிப்தில், 1980ம் ஆண்டு துவங்கி, முப்பது ஆண்டுக்கு மேல், அதிபராக பதவி வகித்து வந்தவர் ஹோஸ்னி முபாரக்.

2011-ம் ஆண்டில் நடந்த ராணுவ புரட்சி மூலம், முபாரக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அரசுக்கு எதிராக புரட்சி செய்தவர்களை கொலை செய்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், 2017ல், அவர் விடுவிக்கப்பட்டார். சமீப காலமாக, உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அவர், கெய்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்றமுன்தினம்இறந்ததாக, எகிப்து அரசின், ‘டிவி’ சேனல் தெரிவித்துள்ளது.

dinamalar