டாக்டர் மகாதீர் மீண்டும் பெர்சத்து தலைவராக பொறுப்பேற்றார்

டாக்டர் மகாதீர் மீண்டும் பெர்சத்து தலைவராக பொறுப்பேற்றார்

மலேசியாவின் பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியை இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று மீண்டும் பெற்றுள்ளார் என்று கட்சி பொதுச்செயலாளர் டத்தோ மர்சுகி யஹ்யா தெரிவித்தார்.

இதை பெர்னாமாவிற்கு வாட்ஸ்அப் வழியாக சுருக்கமான செய்தியில் மர்சுகி உறுதிப்படுத்தினார்.

டாக்டர் மகாதீர் பெர்சத்து தலைவராக திரும்பினாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

“ஆம்,” என்று மட்டும் கூறி, அவர் மேலும் கருத்து தெரிவிக்கவில்லை.

இருப்பினும், இந்த விடயம் குறித்து டாக்டர் மகாதீரிடமிருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

திங்களன்று டாக்டர் மகாதீர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உடனடியாக பெர்சத்து தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, மற்ற கட்சித் தலைவர்கள் அவரது ராஜினாமாவை ரத்துசெய்யும்படியும், கட்சியையும் நாட்டையும் வழிநடத்த திரும்புமாறும் கேட்டுக் கொண்டனர்.