8வது பிரதமராக பதவி ஏற்றார் முகிதீன்

பேரரசர் முன் 8வது பிரதமராக பதவி ஏற்றார், முகிதீன்.

அரண்மனையில் பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன் பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்றார்.

காலை 10.33 மணிக்கு சிறிய சிம்மாசன அறையில் (Balai Singgahsana Kecil (Minor Throne Room)) பதவியேற்பு நடைபெற்றது.

மத்திய அரசியலமைப்பின் 40 (2) (a) மற்றும் 43 (2) (a) பிரிவுகளின்படி அல்-சுல்தான் அப்துல்லா முகிதீனை புதிய பிரதமராக நியமித்தார்.

டாக்டர் மகாதீர் முகமது பிப்ரவரி 24 அன்று ஏழாவது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் இடைக்கால பிரதமராக இருந்தார்.