ஜாஹித்தின் குற்றச்சாட்டுகள் குறித்து முகிதீனின் நிலைப்பாடு என்ன?

ஜாஹித்தின் குற்றச்சாட்டுகள் குறித்து முகிதீனின் நிலைப்பாட்டை அறிய பெர்சத்து இளைஞர் அணி ஆவல்

அம்னோ தலைவர் அகமட் ஜாஹித் ஹமீடி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனது நிலைப்பாட்டைக் தெரிவிக்குமாறு கட்சியின் தலைவர் முகிதீன் யாசினுக்கு பெர்சத்து இளைஞர் அணியினர் கோரியுள்ளனர்.

ஜாஹிட், அவருக்கு எதிரான வழக்குகள் அரசியல் நோக்கமுடையது, பாகுபாடுடையது என்று கூறுகிறார்.

“இதை முகிதீன் ஒப்புக்கொள்கிறாரா?” என்று பெர்சத்து இளைஞர் அணி கேட்கின்றனர்.

“ஜாஹித்தின் தவறுகளை வெளிப்படைத்தன்மையுடனும் பொது நலக் கொள்கைகளின் அடிப்படையிலும் நீதிக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய அடிமட்ட உறுப்பினர்கள் போராடவில்லையா?” என்று இளைஞர் பிரிவு ஒரு அறிக்கையில் கேட்டுள்ளது.

பெர்சத்து இளைஞர் அணியை சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் வழிநடத்துகிறார். அவர் அம்னோவுடன் புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு முகிதீனுக்கு எதிராக இருந்தார்.