சிரியாவில் ரஷிய படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 15 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ரஷிய படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது.

இதற்கிடையில் உள்நாட்டுப் போரில் தொடங்கிய சண்டை தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான சண்டையாக உருவெடுத்துவருகிறது. கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் சண்டையில் சிரியா மற்றும் துருக்கி என இரு தரப்பிலும் 50-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சிரியாவில் இட்லிப் மாகாணம் மாரெட் மிஸ்ரின் என்ற நகரில் ரஷிய படைகள் நேற்று நள்ளிரவு திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

maalaimalar